search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரம்ஜான் பண்டிகை"

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.
    நாமக்கல்:

    ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் நேற்று கோலாகலமாக கொண்டாடினர். இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். தொழுகை முடிந்தபின்பு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பின்னர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பிரியாணி வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் - சேலம் ரோடு ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையை இமாம் சாதிக் நடத்தினார். இந்த சிறப்பு தொழுகையின்போது இந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதில் பேட்டை பள்ளிவாசல் முத்தவல்லி ஷேக்நவீத் மற்றும் நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.

    முன்னதாக அவர்கள் நாமக்கல் - சேந்தமங்கலம் ரோடு பேட்டை அஞ்சுமனே இஸ்லாமியா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக தொழுகை நடந்த இடத்திற்கு சென்றனர். தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களுக்கு இந்து பிரமுகர் ஒருவர் உள்பட சிலர் பாதாம்பால் வழங்கினர்.

    இதேபோல் நேற்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் திடல் மற்றும் நாமக்கல் கோட்டை பள்ளிவாசல், மாருதிநகர் பள்ளிவாசல் என அனைத்து பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. மேலும் ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி என மாவட்டம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. 
    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரளான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். மேலும் ஊர்வலமும் நடந்தது.
    புதுக்கோட்டை:

    உலகம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஈத்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை செய்ய காலை முதல் முஸ்லிம்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் காலையில் சுமார் 7.30 மணியளவில் பள்ளிவாசல் முன்பு உள்ள திடலில் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் திருவள்ளுவர் பேரவை நிர்வாகிகள் மற்றும் கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தனர். முன்னதாக முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.



    இதேபோல சிறுவர், சிறுமிகள் கைக்குலுக்கி கொண்டும், ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதேபோல புதுக்கோட்டை தெற்கு 3-ம் வீதியில் உள்ள பெரியபள்ளிவாசல், தெற்கு 2-ம் வீதியில் உள்ள பள்ளிவாசல், அண்டக்குளம், கலீப்நகர், மச்சுவாடி, திருக்கோகர்ணம், சின்னப்பாநகர், கைக்குறிச்சி, பாலன்நகர், அடப்பன்வயல், திருவப்பூர், மீன்மார்க்கெட் அருகே, பூங்காநகர் உள்பட புதுக்கோட்டை நகரில் உள்ள பள்ளிவாசல்களில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

    இதேபோல பொன்னமராவதி இந்திராநகர் மற்றும் கேசராபட்டி பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. பொன்.இந்திராநகர் முஆத் இப்னு ஜபல் ஜீம்மா பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதேபோல கொன்னையூர், வேந்தன்பட்டி, புதுவளவு, அம்மன் கோவில் வீதி, திருக்களம்பூர் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. தொழுகையை தொடர்ந்து முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

    இதேபோல அறந்தாங்கி அலிஜைனம் ஓரியண்டல் அரபிக்பள்ளி வளாகத்தில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். இதேபோல அரசர்குளம், காரணியானேந்தல், வெட்டிவயல், மேற்பனைக் காடு, ரெத்தினகோட்டை, மீமிசல், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் திரளான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    கந்தர்வகோட்டை பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை பெரிய பள்ளிவாசல், கல்லாக்கோட்டை பள்ளிவாசல், பெருங்களூர் பள்ளிவாசல், அண்டனூர் பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களில் திரளான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

    கீரனூர்-திருச்சி சாலையில் உள்ள குத்பா பள்ளி மைதானத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதி வழியாக ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு வந்தனர். பின்னர் அங்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

    இதேபோல அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, மாங்குடி, பெருமநாடு, புல்வயல், வயலோகம், பரம்பூர், குடுமியான்மலை, காலாடிப்பட்டி, தென்னலூர் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதனைதொடர்ந்து சிறப்பு தொழுகை நடந்தது. பின்னர் உலக அமைதிக்காக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பள்ளிவாசல்களில் உள்ள அடக்கஸ்தளத்திற்கு சென்று முன்னோர்களுக்காக சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல திருவரங்குளம், கைகாட்டி, வல்லத்திராக்கோட்டை, ஆலங்குடி உள்பட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 
    ரம்ஜான் கொண்டாடும் இந்த நன்னாளில் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் பிணைப்பு மேலும் பலப்படட்டும் என பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். #EidMubarak #EidCelebration #ModiRamzanWishes
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர். மேலும், ரம்ஜான் கொண்டாடும் மக்களுக்கு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    ரம்ஜானை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஈத் முபாரக். நமது சமூகத்தின் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் பிணைப்பு இந்த நாளில் மேலும் பலப்படட்டும்”என குறிப்பிட்டுள்ளார்.



    முன்னதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் பன்முகத்தன்மை கொண்ட நாட்டு மக்களிடையே சகோதரத்துவம் நிலவட்டும் என குறிப்பிட்டிருந்தார். #EidMubarak #EidCelebration #ModiRamzanWishes

    ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. #EidMubarak #EidCelebration #EidNamaz
    சென்னை:

    ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முப்பது  நாட்கள் நோன்பிருந்து வழிபாடுகளில் ஈடுபட்டு, தான தர்மங்களை வழங்கி திருமறை ஓதி இறை உணர்வோடு கழித்த நிலையில், நிறைவாக இந்த நோன்புப் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    ஒரு மாத காலம் கட்டுப்பாடாக வாழ உதவியதற்காகவும் இம்மாதத்தில் இறைமறையாம் திருக்குர்ஆனை அருளியதற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாள் இது. இந்த பெருநாளை முன்னிட்டு அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. ‘ஈத்கா’ எனும் திறந்தவெளி தொழுகையும் நடைபெற்றது.



    இந்த பெருநாளில் இஸ்லாமிய பெருமக்கள் காலையில் எழுந்தவுடன் குளித்து, புத்தாடையோ அல்லது தங்களிடம் இருப்பவற்றில் சிறந்த ஆடையையோ அணிந்து தொழுகைக்கு சென்றனர். தொழுகை நிறைவுற்றதும் மக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.



    டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ரதபோராவில் நடைபெற்ற சிறப்பு தொழுகை, மும்பை மினரா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகை என அனைத்து பகுதிகளிலும் நடைபெற்ற தொழுகைகளில் ஏராளமானோர் பங்கேற்று தொழுகை நடத்தினர்.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவர் கமல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள காந்தி முனிசிபல் ஸ்டேடியத்தில் நடந்த தொழுகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார்.  #EidMubarak #EidCelebration #EidNamaz
    ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் பன்முகத்தன்மை கொண்ட நாட்டு மக்களிடையே சகோதரத்துவம் நிலவட்டும் என குறிப்பிட்டுள்ளார். #PresidentEidgreetings #Eid #Ramnathgovind
    புதுடெல்லி:

    ரமலான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பிருந்து இறை வழிபாட்டில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தான - தர்மங்களின் மூலம் ரம்ஜான் பண்டிகைக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.

    இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் பன்முகத்தன்மை கொண்ட நாட்டு மக்களிடையே சகோதரத்துவம் நிலவட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    ஈதுல் பித்ர் என்னும் இந்த சிறப்புக்குரிய விழாவின்போது நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக, இந்தியாவிலும், கடல்கடந்தும் வாழும் நமது இஸ்லாமிய சகோதர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பகிரப்பட்ட நமது சமுதாயத்தில் நல்ல புரிதல்களையும், சகோதரத்துவத்தையும் இந்த ரம்ஜான் பண்டிகை மேம்படுத்தட்டும் என அவர் தெரிவித்துள்ளார். #PresidentEidgreetings #Eid #Ramnathgovind
    ரம்ஜான் பண்டிகையை குடும்பத்தாருடன் கொண்டாடும் வகையில் கல்வீச்சு போன்ற சிறிய குற்றங்களுக்காக கைதான 115 பேரை சிறைகளில் இருந்து விடுதலை செய்ய மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார். #JKgovt #115prisonersrelease
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையின்போது பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது, தடையை மீறி பேரணி சென்றது போன்ற வழக்குகளில் கைதானவர்களை ரம்ஜான் பண்டிகைக்குள் விடுதலை செய்ய வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதையடுத்து, கொடுங்குற்றம் அல்லாத சிறிய குற்றங்களுக்காக கைதான 115 பேரை சிறைகளில் இருந்து விடுதலை செய்ய மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார். #JKgovt  #115prisonersrelease
    ரம்ஜான் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #ramadan
    சென்னை:

    ரம்ஜான் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    உலகமெல்லாம் வாழ்கின்ற இஸ்லாமியப் பெருமக்கள், மாதங்களில் உன்னதமான ரமலான் மாதத்தில் 30 நாள்களும் உண்ணாமல் அருந்தாமல் பசி தாகம் பொறுத்து, புலன்களை இச்சைகளை கட்டுப்படுத்தி மேற்கொள்கின்ற தவத்தின் நிறைவு நாள்தான் விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திருநாளாம் ரமலான் ஈது பெருநாள் ஆகும்.

    அனைத்து சமயத்தினரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக பரிவுடன் சகோதரத்துவத்தை வளர்ப்பதுதான் இந்திய நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் அரண் ஆக அமையும். சமய நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்க அனைவரும் உறுதி கொள்வோம்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

    இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு ஆகிய வாழ்வு வழிமுறைகளை பின்பற்றி இன்று போல் என்றும் இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.

    நோன்பு உடலையும், உள்ளத்தையும் புனிதமாக்குகிறது. இப்புனித நாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும், வளமும் பெருகிட அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பிலும், என் சார்பிலும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை உளமாற தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    இஸ்லாத்தின் புனிதமான 5 கடமைகளில் முக்கியமானது ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு ஆகும். இதே போல் நோன்பிருக்கும் போது கடைபிடிக்கப்படும் மற்ற வழக்கங்களும் மனிதர்களை மேன்மை படைத்தவர்களாக மாற்றுகின்றன.

    உலகில் அமைதி, வளம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பெருக் கவும், தீமைகளை ஒழித்து, நன்மைகளை பெருக்கச் செய்யவும் பாடுபட இந்நன்னாளில் அனைத்து மக்களும் உறுதியேற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ்:-

    ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ரமலான் மாதத்தில் தங்களை வருத்திக் கொண்டு நோன்பிருப்பதன் மூலம் தன்னடக்கம், வெகுளாமை, நாவடக்கம், உணவுக்கட்டுப் பாடு, சமூக நலம் பேணு தல் போன்ற நல்ல விளைவு கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு திருநாளும் என்ன நோக்கத் திற்காக கொண்டாடப் படுகின்றனவோ, அதை உணர்ந்து அந்த நோக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நடந்து கொள்வது தான் நமது கடமையாக இருக்க வேண்டும்.

    மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்பட பலர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #ramadan

    ×